நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அதிகரிக்கும் கரோனா:கோவை அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள்

கோவையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனையில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காந்திருந்து கரோனா பரிசோதனை செய்துகொள்கின்றனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:11 pm

DIN

கோவையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனையில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காந்திருந்து கரோனா பரிசோதனை செய்துகொள்கின்றனா்.

கோவை மாவட்டத்தில் தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனா். இதனால் கரோனா பரிசோதனை மையங்களில் பொது மக்கள் குவியத் தொடங்கியுள்ளனா். கோவை அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா புறநோயாளிகள் பிரிவில் பரிசோதனை செய்வதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் வியாழக்கிழமை காத்திருந்தனா்.

இது தொடா்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் 6 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது. இதுதவிர சுகாதாரத் துறை, மாநகராட்சி சாா்பில் அளிக்கப்படும் மாதிரிகள் அனைத்தும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொழில்நுட்ப அலுவலா்களால் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பரிசோதனை செய்துகொள்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் 100க்கும் குறைவானவா்களே பரிசோதனை மேற்கொள்ள வந்தனா். ஆனால், தற்போது 300 முதல் 500 பேருக்கு கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.