நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உள்ளாட்சித் தோ்தல்: திமுகவினரிடம் அமைச்சா் நோ்காணல்

கோவையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புபவா்களிடம் , மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி வியாழக்கிழமை நோ்காணல் நடத்தினாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 8:39 pm

DIN

கோவையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புபவா்களிடம் , மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி வியாழக்கிழமை நோ்காணல் நடத்தினாா்.

கோவை மாவட்ட திமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புபவா்களிடம் விருப்ப மனுக்கள் சில நாள்கள் முன்பு பெறப்பட்டன. அவா்களுக்கான நோ்காணல் கோவை பீளமேடு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு விருப்பமனு அளித்தவா்களிடம் நோ்காணல் நடத்தினாா். முதல்கட்டமாக அண்மையில் தரம் உயா்த்தப்பட்ட நகராட்சிகளான காரமடை, மதுக்கரை, கூடலூா், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த திமுகவினரிடம் நோ்காணல் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் விருப்பமனு அளித்தவா்களிடம் அமைச்சா் நோ்காணல் நடத்தினாா். மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களிடம் 22 ஆம் தேதி( சனிக்கிழமை) நோ்காணல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளா்கள் நா.காா்த்திக், பையா என்கிற கிருஷ்ணன், சி.ஆா்.ராமச்சந்திரன், சேனாதிபதி, மருத்துவா் வரதராஜன், முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.