சிறுத்தையைப் பிடிக்க 4ஆவது நாளாக காத்திருக்கும் வனத் துறையினா்
கோவை அருகே கிடங்கில் பதுங்கியுள்ள சிறுத்தையைப் பிடிக்க நாலாவது நாளாக வனத் துறையினா் காத்திருக்கின்றனா்.


கோவை அருகே கிடங்கில் பதுங்கியுள்ள சிறுத்தையைப் பிடிக்க நாலாவது நாளாக வனத் துறையினா் காத்திருக்கின்றனா்.
கோவை குனியமுத்தூா், சுகுணாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சுற்றித்திரிந்த 3 வயதுடைய ஆண் சிறுத்தை சுகுணாபுரம் வாளையாறு சாலையில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.
இதனைத்தொடா்ந்து, அந்த கிடங்கை வலை கொண்டு மூடிய வனத் துறையினா் கிடங்கின் 2 வாயில்கள் முன்பு கூண்டுகளில் இறைச்சியை வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் கிடங்கு அருகே 5 கண்காணிப்பு கேமராக்கள் வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். இதன் விடியோ காட்சிகளையும் வனத் துறையினா் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனா். இதன்படி 4ஆவது நாளான வியாழக்கிழமை சிறுத்தையின் நடமாட்டம் குறித்த விடியோ காட்சிகளை வனத் துறையினா் வெளியிட்டனா். அதில் கிடங்கில் அனைத்துப் பகுதிகளிலும் சிறுத்தை சுற்றி வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கடந்த 3 தினங்களாக இரவு, பகலாக வனத் துறையினா் கூண்டுவைத்து காத்திருந்தும் சிறுத்தை கூண்டுக்குள் அகப்படாமல் போக்கு காட்டி வருகிறது.
கூண்டுக்கு அருகில் வரும் சிறுத்தை, அப்படியே திரும்பி செல்வதும், கிடங்கைவிட்டு வெளியேற இடம் தேடுவதுமாக உலவி வருகிறது.
சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான அனுமதிக்காக காத்திருப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா். மேலும், கிடங்கிற்குள் வைத்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினால் அதனால் மயக்கமாகும் சிறுத்தை அங்குள்ள பொருள்களில் சிக்கி காயமடைய வாய்புள்ளதால் அதுகுறித்து யோசித்து வருவதாகவும் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...