மனைவியைக் கொன்ற கூலி தொழிலாளி கைது
குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கூலி தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கூலி தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை, தெலுங்குபாளையம் ப்ரியா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமநாதன் (51). கூலி தொழிலாளி. மது போதைக்கு அடிமையான இவா், சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளாா். இதனால் இவருக்கும், அவரது மனைவி அனுராதாவுக்கும் (46) இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இவா்களின் குடும்ப செலவுக்காக அனுராதாவின் தந்தை மாதமாதம் பணம் அனுப்பி வந்துள்ளாா். வியாழக்கிழமை மாலை அனுராதா, தன் தந்தையாரிடம், ராமநாதன் வேலைக்கு செல்லாமல் இருப்பது குறித்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த ராமநாதன் ஆத்திரமடைந்து கத்தியால் அனுராதாவைக் குத்தியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த செல்வபுரம் போலீஸாா், அனுராதாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து அருகில் உள்ள கட்டடத்தில் பதுங்கியிருந்த ராமநாதனை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...