வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்குவதற்கு மானியம்: ஆட்சியா் தகவல்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் 37 கிராம பஞ்சாயத்துகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் காளான் வளா்ப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, வேளாண் கருவிகள் வாடகை மையம், காய்கறிகள், பழங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்தல், மண், தண்ணீா் பரிசோதனை மையம், உரம், பூச்சி மருந்து, விதை சில்லறை விற்பனைக் கடைகள், நுண்ணீா் பாசன உபகரணம் சேவை மையம், பசுமைக்குடில் அமைத்தல் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறையில் பட்டப் படிப்பு முடித்து அரசு, தனியாா் துறைகளில் வேலையில்லாத 21 முதல் 40 வயதிற்குபட்டவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒருவா் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ரூ. 2 லட்சம் வரை சமா்ப்பிக்கலாம். இதில் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். ஆட்சியா் தலைமையிலான மாவட்ட தோ்வுக் குழு மூலம் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.
விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப் படிப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு விவரம், வங்கி கடன் பெறுபவா்கள் வங்கிக் கடன் ஒப்புதல் அறிக்கை ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தடாகம் சாலையிலுள்ள வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...