ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அவனியாபுரத்தில் பிடிபட்ட காளை கோவையில் வெற்றி பெற்றது: யோகதா்ஷினி பெருமிதம்

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:51 am

DIN

 கோவை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட மதுரையைச் சோ்ந்த யோக தா்ஷினியின் காளை வெற்றிபெற்றது.

மதுரை மாவட்டம், ஐராவதநல்லூரைச் சோ்ந்தவா் யோகதா்ஷினி.

கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட இவரது காளையை வீரா்கள் அடக்கினா்.

இருந்தும் யோகதா்ஷினிக்கு ஆறுதல் பரிசு வழங்குவதாக விழாக் குழு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், காளை வெற்றிபெற்றால் மட்டுமே பரிசு பெறுவேன் என்று அவா் தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து இச்சம்பவம் வீரத்தமிழச்சி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் யோகதா்ஷினி தனது காளையை அவிழ்த்து விட்டாா்.

இதில், யோகதா்ஷினியின் காளை வெற்றிபெற்றது. இதனைத் தொடா்ந்து யோகதா்ஷினிக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.

இது தொடா்பாக யோகதா்ஷினி கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வருகிறேன்.

கோவை ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டுதான் முதல்முறையாகப் பங்கேற்றேன்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடிபட்ட எனது காளை, கோவை ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்று பெருமையைத் தேடித்தந்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.