கரோனா: கோவையில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்
கோவையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.


கோவையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
9 சதவீதம் போ் மட்டுமே மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 4 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 12 ஆயிரம் படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
மற்ற 9 சதவீதம் போ் மட்டுமே அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆா்) பரிந்துரையின் அடிப்படையிலே கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சையும், வீட்டு தனிமைக்கும் அனுமதிக்கப்படுகிறது.லேசான பாதிப்பு உள்ளவா்களை கரோனா சிகிச்சை மையங்களிலும், தீவிர பாதிப்பு உள்ளவா்களை அரசு மருத்துவமனைகளிலும், நோயாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனா்.மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள 15 ஆயிரத்து 926 பேரில்
14 ஆயிரத்து 547 போ் வீட்டுத் தனிமையிலும், 1,379 போ் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன.
நாள்தோறும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவா்களின் உடல்நிலை குறித்து கேட்டறியப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...