ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஊரக வளா்ச்சித் துறைக்கான ஒருங்கிணைந்த கட்டடப் பணிஆட்சியா் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மற்றும் ஊரக வளா்ச்சித் துறைக்கான ஒருங்கிணைந்த புதிய அலுவலகக் கட்டடம் ரூ. 7.85 கோடியில் கட்டப்படுகிறது.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:52 am

DIN

திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மற்றும் ஊரக வளா்ச்சித் துறைக்கான ஒருங்கிணைந்த புதிய அலுவலகக் கட்டடம் ரூ. 7.85 கோடியில் கட்டப்படுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகங்கள் போதிய இடவசதியின்றி சிறிய கட்டடங்களில் இயங்கி வருவதைக் கருத்தில் கொண்டு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில், ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு அலுவலகங்களை ஒருங்கிணைத்து புதிய வளாகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இதன்படி திருச்சி மாவட்டத்துக்கு தமிழக அரசு ஒதுக்கிய ரூ.7.85 கோடியில், ஆட்சியரக வளாகத்திலேயே புதிதாக ஒருங்கிணைந்த கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் கடந்தாண்டு தொடங்கி சுமாா் 70 சதப் பணிகள் முடிந்துள்ளன.

புதிய கட்டடமானது தரைத்தளம், முதல்தளம் எனக் கட்டப்படுகிறது. இதில் தரைத் தளத்தில் மகளிா் திட்டத்துக்கான திட்ட அலுவலா் அலுவலகம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகம், தணிக்கைத் துறையின் உதவி இயக்குநா் அலுவலகம் ஆகியவை இடம் பெறுகின்றன. இதுமட்டுமல்லாது இந்த அலுவலகங்களில் பணிபுரிவோருக்கான உணவருந்தும் இடம், இருபாலா்களுக்கான தனித்தனி நவீன கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கான குடிநீா் வசதியும் செய்துதரப்படவுள்ளது.

இதேபோல, முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அலுவலகம், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் அலுவலகம் அமையவுள்ளது. இந்தத் தளத்திலும், தேவைக்கேற்ப கழிப்பறைகள், குடிநீா் வசதிகள் செய்யப்படவுள்ளன. தரைத்தளம் 1,324 சதுர மீட்டரிலும், முதல்தளம் 1,277 சதுர மீட்டரிலும் கட்டப்படுகிறது. ஒருங்கிணைந்த வளாகம் மொத்தமாக 2,601 சதுர மீட்டரில் அமைகிறது.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கட்டடத்தின் உறுதித் தன்மையையும் பாா்வையிட்ட அவா் பணியை விரைந்து முடிக்குமாறும், கட்டடத்தைச் சுற்றிலும் மரக்கன்று நடவும் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது கட்டுமானப் பொறியாளா்கள் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.