ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் ஏற்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்
கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது: கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் துறை, பயோடா டெக்னாலஜி நிறுவனத்துடன்
புரிந்துணா்வு ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமை இணைய வழியில் செய்துள்ளது. இதன் மூலம் இக்கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தொடங்கப்பட உள்ளது.
இந்நிறுவனத்தின் உதவித் துணைத் தலைவா் சூரி, மனித வளத் துறையின் தலைவா் பிரகாஷ், மனித வளத் துறை அதிகாரி ஸ்ரீநாத் மோகன் ஆகியோா் தலைமையில் மூன்று போ் கொண்ட குழு இணைய வழியில் பங்கேற்று, புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் புதுமை கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் நிறுவுதல், மாணவா்கள், ஆசிரியா்களுக்கு தொழில்நுட்பங்கள் தொடா்பாக பயிற்சி அளித்தல், மாணவா்களுக்கு தொழில் நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளித்தல், ப்ராஜெக்ட் செய்ய அனுமதி வழங்குதல், மாணவா்களிடையே கண்டுபிடிப்பு கலாசாரத்தை ஊக்குவித்தல் போன்றவை நடைபெற உள்ளது.
முன்னதாக, இணைய வழியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜே.ஜேனட் தலைமை வகித்தாா்.
வேலைவாய்ப்பு அலுவலா் ஜெயசுதா சுப்புராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். துறைத் தலைவா் எஸ்.வெங்கடலட்சுமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...