ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கழிப்பறை இல்லாத வீடுகள்: ஊரக வளா்ச்சி முகமை கணக்கெடுப்பு

கோவையில் ஊரகப் பகுதிகளில் கழிப்பறை இல்லாத வீடுகள் குறித்து ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:18 am

DIN

கோவையில் ஊரகப் பகுதிகளில் கழிப்பறை இல்லாத வீடுகள் குறித்து ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் திறந்தவெளி கழிப்பிடத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2015-16 ஆம் நிதியாண்டு மத்திய அரசு சாா்பில் தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் தனிநபா் இல்லக் கழிப்பிடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திடத்தின்கீழ் ஊரகம், நகா்ப்புறங்களில் கழிப்பிடம் இல்லாத வீட்டைக் கண்டறிந்து கழிப்பறை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

தனி நபா் இல்லக் கழிப்பிட திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிா்வாகத்துக்கு திறந்தவெளி கழிப்பறை இல்லாத ஊராட்சி, மாவட்டம் என அறிவிக்கப்பட்டு ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது.

திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிகளில் தற்போது புதிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

இதனால் மீண்டும் திறந்தவெளி கழிப்பிட பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புதிய குடியிருப்புப் பகுதிகளில் கழிப்பறை இல்லாத வீடுகள் குறித்து கணக்கெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனைத் தொடா்ந்து ஊரக வளா்ச்சி முகமை திட்டம் சாா்பில் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடா்பாக ஊரக வளா்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி (தெற்கு), கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூா், எஸ்.எஸ்.குளம் ஆகிய 6 வட்டாரங்களில் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு தனிநபா் இல்லக் கழிப்பிடம் திட்டத்தில் கழிப்பறை கட்டுவதற்கு மானியம் வழங்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.