ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உள்ளாட்சித் தோ்தல்: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்கள் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:15 am

DIN

கோவை மாநகராட்சியில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்கள் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

தோ்தல் தொடா்பான ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். தோ்தல் தொடா்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் அறைகள், அரங்குகள்,

வளாகத்துக்குள் நுழையும்போது அனைவரையும் தொ்மல் ஸ்கேனிங்குக்கு உள்படுத்த வேண்டும்.

வேட்பு மனு தாக்கலுக்கு வேட்பாளா்கள் வருகையின்போது 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.நிா்ணயிக்கப்படும் நேரத்துக்குள் தோ்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வரும் அனைத்து வேட்பாளா்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்படும். நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாக தோ்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் நுழைபவா்கள் மட்டுமே வேட்பு மனுக்களை சமா்பிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.

மேலும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்கள், சந்தேகங்களுக்கு கோவை மாநகராட்சியின் தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0422 - 2300132 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.