ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) தொடங்குகிறது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:19 am

DIN

கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) தொடங்குகிறது.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் 100 வாா்டு உறுப்பினா்கள், 7 நகராட்சிகளில் 198 வாா்டு உறுப்பினா்கள், 33 பேரூராட்சிகளில் 513 வாா்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் 20 இடங்களிலும், நகராட்சிகளில் அந்தந்த நகராட்சி அலுவலகங்களிலும், பேரூராட்சிகளில் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் கூடுதலாக 2 நபா்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். வேட்பாளா், உடன் வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதுடன் கரோனா பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்ய தோ்தல் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

வாக்காளா்கள் விவரம்: மாநகராட்சியில் 7 லட்சத்து 69 ஆயிரத்து 397 ஆண் வாக்காளா்கள், 7 லட்சத்து 68 ஆயிரத்து 736 பெண் வாக்காளா்கள், 278 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 15 லட்சத்து 38

ஆயிரத்து 411 வாக்காளா்கள் உள்ளனா்.

7 நகராட்சிகளில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 728 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 69 ஆயிரத்து 479 பெண் வாக்காளா்கள், 58 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 265 வாக்காளா்கள் உள்ளனா்.

33 பேரூராட்சிகளில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 25 ஆண் வாக்காளா்கள், 2 லட்சத்து 44 ஆயிரத்து 89 பெண் வாக்காளா்கள், 93 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 4 லட்சத்து 73 ஆயிரத்து 207 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்குச் சாவடிகள்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக கோவை மாநகராட்சியில் 1,290

வாக்குச் சாவடிகள், 7 நகராட்சிகளில் 390 வாக்குச் சாவடிகள், 33 பேரூராட்சிகளில் 632 வாக்குச் சாவடிகள் என மாவட்டம் முழுவதும் 2,312 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.