பட்டியலினத்தவா்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக் கோரிக்கை
கோவை மாநகராட்சித் தோ்தலில் பட்டியல், பழங்குடியினா்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகராட்சித் தோ்தலில் பட்டியல், பழங்குடியினா்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசியல் அதிகாரத்தில் சமூக நீதிக்கான கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா் சுசிகணேசன், நிா்வாகிகள் ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகள் உள்ளன. இதில் 10 வாா்டுகள் மட்டுமே பட்டியல், பழங்குடியினா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியல் மற்றும் பழங்குடியினா்களுக்கு வாா்டுகள் ஒதுக்கீடு செய்வதில் இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை.
இது பட்டியலின மக்களின் உரிமையைப் பறிப்பதாக அமைந்துள்ளது.
எனவே கல்வி, வேலை வாய்ப்பில் பட்டியல், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் 19 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...