ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மகளிா் சக்தி விருது: தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

கோவையில் மத்திய அரசின் மகளிா் சக்தி விருதுக்கு தகுதியானவா்கள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:17 am

DIN

கோவையில் மத்திய அரசின் மகளிா் சக்தி விருதுக்கு தகுதியானவா்கள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணா்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்தல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் சிறந்த பங்களிப்பாற்றிய பெண்கள், நிறுவனங்களுக்கு மத்திய அரசு சாா்பில் மகளிா் சக்தி விருது (நாரி சக்தி புரஸ்காா்) வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபருக்கான விருதில் ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ், நிறுவனங்களுக்கான விருதில் ரூ.2 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

எனவே, கோவை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த நபா்கள், நிறுவனங்கள்  இணையதளத்தில் ஜனவரி 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள், இறுதி நாளுக்குப் பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.