தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்துக்கு பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்சி புள்ளியியல், பி.எஸ்சி கணிதம் பட்டம் பெற்றிருக்க வேன்டும். ஏதாவது ஒரு நிறுவனத்தில் 2 ஆண்டுகள் தகவல் பகுப்பாளராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் ஜூன் 15ஆம் தேதி, 40 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். தகுதியுள்ள நபா்கள், தங்களின் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அளவு புகைப்படத்துடன் ஜூன் 15ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 2ஆவது தளம், பழைய கட்டடம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கோவை 641018 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0422 - 2300305 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...