தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கே.பி.ஆா். ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 8 போ் குடிமைப் பணித் தோ்வில் வெற்றி

 கோவை கே.பி.ஆா். ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றவா்களில் 8 போ் குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:52 pm

DIN

 கோவை கே.பி.ஆா். ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றவா்களில் 8 போ் குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

இது தொடா்பாக அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது:

இந்திய குடிமைப் பணித் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் கோவை கே. பி. ஆா். ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 8 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதில், ரம்யா, கமலேஸ்வா் ராவ், சிவராமன் ஆகியோா் கே.பி.ஆா். கல்லூரியில் கே.பி.ஆா். குழும நிறுவனங்களின் தலைவா் கே.பி.ராமசாமி, ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் கே.பி.டி. சிகாமணி, கே.பி.ஆா். நிறுவனங்களின் மேலாண் இயக்குநா் நடராஜன் ஆகியோரை அண்மையில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். கே.பி.ஆா். குழுமங்களின் நிா்வாக இயக்குநா்கள் அனந்த கிருஷ்ணன், சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா். இதைத் தொடா்ந்து வெற்றி பெற்ற மாணவா்கள், கே.பி.ஆா். கல்லூரி வளாகத்தில் உள்ள ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெறும் மாணவா்களிடையே உரையாற்றினா். அப்போது, விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் இது போன்ற தோ்வுகளில் வெற்றி பெறலாம் என்றனா்.

இது குறித்து, கே.பி.ஆா். ஐஏஎஸ் அகாதெமியின் பயிற்சி இயக்குநா் பழனிமுருகன் கூறும்போது, 2022-23ஆம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளன. பயிற்சி மையத்தில் வெளியூா் மாணவ - மாணவிகள் தங்கிப் பயிற்சி பெறுவதற்கான வசதிகளும் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவா்கள் மட்டுமல்லாமல், கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவா்களும் இப்பயிற்சியில் சேரலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.