தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிங்காநல்லூரில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்

News image
Updated On :1 ஜூன் 2022, 7:53 pm

DIN

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் முதல் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 முதல் மே 25ஆம் தேதி வரை 2 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை கிழக்கு மண்டலம், 55ஆவது வாா்டுக்கு உள்பட்ட சிங்காநல்லூா் நாராயணசாமி லே-அவுட் பகுதியில் சுகாதார ஆய்வாளா்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டிகள், வாகனங்களில் செயல்படும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, 2 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, 56ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஒண்டிப்புதூா் இட்டேரி சாலையில் 2 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளா்களிடம் தலா ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.