பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்: வாழைகள் நாசம்

மேட்டுப்பாளையம் தோலம்பாளையம் மணல்காடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம் சுமார் 700க்கும் மேற்பட்ட வாழைகளை முறித்து சேதப்படுத்தியது.

News image
Updated On :12 ஜூன் 2022, 1:52 pm

DIN


மேட்டுப்பாளையம் தோலம்பாளையம் மணல்காடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம் சுமார் 700க்கும் மேற்பட்ட வாழைகளை முறித்து சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓடந்துறை, நெல்லித்துறை, ஊமப்பாளையம், தாசம்பாளையம், குரும்பனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக கடந்த பல நாட்களாகவே தாசம்பாளையம், குரும்பனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் செய்வதறியாது கவலையுடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு தோலம்பாளையம் மணல்காடு பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதியின் அருகிலேயே முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம் ராமசாமி என்பவரது விளைநிலத்தில் சோலார் மின்வேலியினை உடைத்து உள்ளே புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 700க்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழைகளை முறித்து சாப்பிட்டதோடு, மிதித்தும் நாசம் செய்துள்ளன. இதனால் இந்த வாழை விவசாயத்தை நம்பி கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த விவசாயி ராமசாமியின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Story image

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியதாவது:

காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தங்களை கருணைக்கொலை செய்ய வேண்டும் என மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். நாளைக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் யானைகளால் நாசம் செய்யப்பட்ட பயிர்களை வனத்துறை அலுவலகம் முன்பு கொட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கும் தீர்வு எட்டப்படாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Story image

இதுகுறித்து விவசாயி சந்திரகுமார் கூறுகையில் ஒரு வாழை பயிரிட்டு முதிர்வு வரை சுமார் ஒரு வாழைக்கு ரூ.500 தேவைப்படுகிறது. இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசத்தால் நம்பிக்கையில்லாத விவசாயமாக மாறி வருவதாக கவலை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.