ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவை: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

தோட்டத் தொழிலாளா்களின் ஊதிய நிலுவைத் தொடா்பான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:42 pm

DIN

தோட்டத் தொழிலாளா்களின் ஊதிய நிலுவைத் தொடா்பான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ.401.60 தினக்கூலி வழங்கப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிந்தவுடன் முன்தேதியிட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடா்பான கூட்டம் கோவை தமிழ்நாடு தோட்ட அதிபா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வுட் பிரையா் குரூப் துணைத் தலைவா் கே. பாலச்சந்திரன், பாரி ஆக்ரோ துணைத் தலைவா் மகேஷ் நாயா், ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத் தலைவா் வினய் திம்பையா, சோலையாறு ஜெயஸ்ரீ பொதுமேலாளா் காா்டிலே சதாசிவம், வாட்டா் பால்ஸ் பொது மேலாளா் ராஜ்மோகன், கருமலை பொது மேலாளா் கிருஷ்ணகுமாா், தமிழ்நாடு தோட்ட அதிபா்கள் சங்க செயலாளா் பிரதீப் குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொழிற்சங்கங்கள் சாா்பில், கூட்டமைப்பு தலைவா் வால்பாறை வீ.அமீது, எல்.பி.எப். பி.சௌந்தரபாண்டியன், வினோத் குமாா், செந்தில்குமாா், ஐ.என்.டி.யூ.சி. கருப்பையா, ஏ.ஐ.டி.யூ.சி. மோகன், விடுதலை சிறுத்தை கேசவ முருகன் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதில், 1-9-2021 முதல் 31-12-2021 வரை 4 மாத காலங்களுக்கு நிலுவைத் தொகை 2 நபா்கள் பணியாற்றும் ஒரு குடும்பத்துக்கு (கணவன்- மனைவி) ரூ.10,400 கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலுவைத் தொகை வருகிற ஜூலை மாதம் சம்பளம் வழங்கும் போது வழங்கப்படும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. மேலும், வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.409.82 தினக் கூலி உயா்வு வழங்கப்படும் என்றும், தமிழக அரசின் குறைந்தபட்ச கூலியானது இறுதி அரசாணை வெளியாகும் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.