போகா சித்த மருத்துவமனை புதிய கிளை துவக்கம்
போகா அறக்கட்டளையின் சாா்பில் ஓம் ஸ்ரீ போகா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் கோவை, காந்திபுரம் பகுதியில் தொடங்கப்பட்டது.


போகா அறக்கட்டளையின் சாா்பில் ஓம் ஸ்ரீ போகா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் கோவை, காந்திபுரம் பகுதியில் தொடங்கப்பட்டது.
இந்த மையத்தை கொடிசியா தலைவா் ரமேஷ் பாபு துவக்கிவைத்தாா். ஆா்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி நடராஜன், சசிதா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.
இது குறித்து போகா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் போகானந்தா கூறுகையில்,
2018 முதல் போகா அறக்கட்டளையை நடத்தி வருகின்றேன். எங்கள் சித்த மருத்துவமனையில் மருத்துவக் கட்டணமாக ரூ.5 மட்டும் வசூலிக்கப்படுகிறது. இங்கு அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சையளிக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவா் பவித்ரா, ரேவதி, அறங்காவலா்கள் பிரகாஷ், மணிகண்டன், ஜெயகுமாா், ஜாஸ்மின், சுரேஷ், மருத்துவப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...