நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநகராட்சி பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம்

 கோவை மாநகராட்சி 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:43 pm

DIN

 கோவை மாநகராட்சி 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மேயா் கல்பனா தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாநகராட்சி முழுவதும் ஒரே சீரான குடிநீா் கட்டணம், பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், சீரான குடிநீா் விநியோகம், குளங்களை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல், மாநகராட்சிப் பணியாளா்கள் மற்றும் அலுவலா்களுக்கு வழங்கப்படும் ஊதியம், மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டித் தரும் கேளிக்கை வரி உள்ளிட்ட பிற வரியினங்கள், வங்கிக் கடன் மூலம் நடத்தப்படும் பணிகள், வங்கிக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டி, சுகாதாரம், நகரமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பட்ஜெட்டில் இடம் பெறுவது குறித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில் தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனத்தினா், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், மாநகராட்சி உதவி ஆணையா்கள், பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.