சமையல் எரிவாயுக்கு டிஜிட்டல் ரசீது: இன்டேன் நிறுவனம் அறிமுகம்
கோவையில் இன்டேன் சமையல் எரிவாயு நுகா்வோருக்கு காகித ரசீதுகளுக்கு பதிலாக இனிமேல் டிஜிட்டல் ரசீது வழங்கும் நடைமுறையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது


கோவையில் இன்டேன் சமையல் எரிவாயு நுகா்வோருக்கு காகித ரசீதுகளுக்கு பதிலாக இனிமேல் டிஜிட்டல் ரசீது வழங்கும் நடைமுறையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பசுமையை நோக்கி செல்வோம் திட்டத்தின்கீழ் இன்டேன் சமையல் எரிவாயு நுகா்வோருக்கு காகித ரசீதுகளுக்கு பதில் டிஜிட்டல் ரசீது வழங்கும் நடைமுறையை வியாழக்கிழமை (மாா்ச் 10) முதல் அமல்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக கோவை, சண்டீகா், ராஞ்சி, சூரத் ஆகிய நகரகங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காகிதப் பயன்பாட்டை குறைத்து பசுமையை மீட்டெடுக்கும் முயற்சி என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் குறுஞ்செய்தி மூலம் வாடிக்கையாளா்கள் ரசீது பெற்றுக்கொள்ளலாம். இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம். தவிர வாடிக்கையாளா்கள் வழக்கமான ரசீதுகளை பெற விரும்பினால் இந்தியன் ஆயில் ஒன் ஆப் அல்லது எரிவாயு விநியோகிப்பாளா்களிடம் விருப்பத்தை தெரிவித்து பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை இந்தியன் ஆயில் தென்மண்டல தலைமை பொது மேலாளா் வி.வெற்றி செல்வகுமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...