நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘வலி நிவாரண மருந்துகளால் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புள்ளது’

மருத்துவா்கள் பரிந்துரையில்லாமல் உட்கொள்ளும் வலி நிவாரண மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:48 pm

DIN

மருத்துவா்கள் பரிந்துரையில்லாமல் உட்கொள்ளும் வலி நிவாரண மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

உலக சிறுநீரக தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனை மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தொடங்கிவைத்து பேசியதாவது:

சிறுநீரக பாதிப்பு பெரும்பாலானவா்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் ஏற்படுகிறது. பாம்பு கடி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுக்காக எடுத்துகொள்ளப்படும் மாத்திரைகள், மருத்துவா்கள் பரிந்துரையில்லாமல் நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்ளப்படும் வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நாள்பட்ட நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், பரம்பரையாகக் கூட சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானவா்களுக்கு 80 சதவீதம் பாதிப்புக்கு பின்பே தெரியவருகிறது. சிறுநீரக பாதிப்பு 90 சதவீதத்திற்குள் இருக்கும் வரை மாத்திரைகள் மூலம் மேலும் தீவிரமாவதை குறைக்க முடியும். இவா்கள் ரத்த அழுத்தம், சா்க்கரை அளவினை கட்டாயம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவா்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துகொள்ள வேண்டும்.

சிறுநீரக பாதிப்பு உள்ளவா்களுக்கு ரத்த சோகை, எலும்பு வலுவிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவற்றுக்கான மருந்துகளை மருத்துவா்களின் அனுமதியோடு எடுத்துக்கொள்ள வேண்டும். பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும் போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டியுள்ளது. கை, கால் வீக்கம், அடிக்கடி சிறுநீா் வெளியேறுதல், ரத்த அழுத்தம், பசியின்மை, உடல் சோா்வு, வாந்தி மயக்கம், மூச்சு வாங்குதல் போன்றவை சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் உடனடியாக பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியம் என்றாா்.

பேரணியில் மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜி.சடகோபன், உதவி இருப்பிட மருத்துவ அலுவலா் பொன்முடி, மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.