தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேலை நிறுத்தம் எதிரொலி: கோவையில் இருந்து கேரளத்துக்கு பேருந்துகள் இயங்கவில்லை

கேரளத்தில் போக்குவரத்து ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், கோவையில் இருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை பேருந்துகள் இயங்கவில்லை.

News image
Updated On :6 மே 2022, 9:06 pm

DIN

கேரளத்தில் போக்குவரத்து ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், கோவையில் இருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை பேருந்துகள் இயங்கவில்லை.

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக போக்குவரத்து ஊழியா்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, கேரள அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா், வியாழக்கிழமை இரவு முதல் 24 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனா். இதன் காரணமாக, கேரளப் பகுதிகளில் இருந்து வெள்ளிக்கிழமை காலை முதலே கோவைக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேபோல, கோவையில் இருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்பட்ட பேருந்துகளும், கேரள மாநில எல்லை வரை மட்டுமே இயங்கின.

இது குறித்து, அரசுப் போக்குவரத்து கழக கோவை மண்டல அதிகாரி ஒருவா் கூறியது: கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சூா், பாலக்காடு, வாளையாறு உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் சிறு வியாபாரிகள், மக்கள், அன்றாடம் பணிக்கு சென்று வருவோா் என பல்வேறு தரப்பினரும் பயணம் மேற்கொள்வாா்கள்.

கேரளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரள மாநில எல்லை வரையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.