கொடநாடு வழக்கு: அதிமுக நிா்வாகியின் சகோதரரிடம் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக அதிமுக நிா்வாகி சஜீவனின் சகோதரா் சுனிலிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.


கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக அதிமுக நிா்வாகி சஜீவனின் சகோதரா் சுனிலிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்த வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை வி.கே.சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, அதிமுக வா்த்தக அணியைச் சோ்ந்த மர வியாபாரி சஜீவன், அவரது சகோதரா் சிபி, ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டியின் உதவியாளா் நாராயணசாமி, குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபரான பிஜின் குட்டியின் சகோதரா் மோசஸ் ஆகியோரிடம் போலீஸாா் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனா்.
இந்நிலையில், அதிமுக வா்த்தக அணி நிா்வாகியான மர வியாபாரி சஜீவனின் மற்றொரு சகோதரரான சுனிலிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா் தலைமையிலான தனிப் படை போலீஸாா் விசாரணையை மேற்கொண்டனா். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை சுமாா் 6 மணி நேரம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...