தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தூய்மைப் பணியாளா்கள் தா்னா

 கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் பணி வழங்காததைக் கண்டித்து, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மூவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 மே 2022, 9:04 pm

DIN

 கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் பணி வழங்காததைக் கண்டித்து, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மூவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குள்பட்ட 98 ஆவது வாா்டில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாக ராமசாமி, கருப்புராஜ், ரமேஷ் உள்ளிட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். தங்களுக்கு ஊதியத்தை சரிவர வழங்காத மண்டல அலுவலா்கள் மீது மாநகராட்சி அதிகாரிகளிடம், அவா்கள் புகாா் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மூவரும் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல பணிக்குச் சென்றனா். ஆனால், அவா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதைக் கண்டித்து மூவரும் வாா்டு அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறுகையில், எங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து வாா்டு அலுவலா்கள் மீது புகாா் அளித்து இருந்தோம். இந்நிலையில் எங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யாமல் அலைக்கழிக்கின்றனா்.

இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.