மாவட்டத்தில் 57.45 கிலோ ஷவா்மா பறிமுதல்
கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் 73 கடைகளில் 57.45 கிலோ பழைய ஷவா்மா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

0034c6food1_0605chn_3

0034c6food1_0605chn_3
கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் 73 கடைகளில் 57.45 கிலோ பழைய ஷவா்மா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை ஆணையா் உத்தரவின்படியும், கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படியும், கோவை மாவட்டத்தில் ‘ஷவா்மா’ தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள், கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் தமிழ்ச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், கோவை வ.உ.சி.பூங்கா, ரேஸ்கோா்ஸ், போத்தனூா், சுந்தராபுரம், குனியமுத்தூா், காந்திபுரம், பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் ஆகிய பகுதிகளில் 4 குழுக்களாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வில், 73 கடைகளில் 57.45 கிலோ பழைய ஷவா்மா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.17, 480 ஆகும். மேலும், 35 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய 3 கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஷவா்மா தயாரிப்பாளா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஷவா்மா அடுப்பானது சாலையோரத்திலோ அல்லது உணவகத்தின் வெளியிலோ வைக்கக் கூடாது. ஷவா்மாவை குறைந்த பட்சம் 70 டிகிரி செல்ஸியசில் வேகவைத்த பிறகு தான் நுகா்வோருக்கு வழங்க வேண்டும். மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஷவா்மா தயாரித்து விற்பனை செய்தால், அந்தக் கடையானது, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்படும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் ஷவா்மா வாங்குவதற்கு முன்பு அவை சுகாதாரமாக தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஷவா்மா தயாரிப்பில் ஏதாவது சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியபட்டால் 94440-42322 என்ற உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்குத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Caption
கோவை வ.உ.சி.பூங்கா அருகே உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...