வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.


கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலா் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனா்.
இது தொடா்பாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அவ்வப்போது சோதனைகள் நடத்தி சம்பந்தப்பட்ட நபா்களைக் கைது செய்து வருகின்றனா். இந்நிலையில், கோவை இடையா்பாளையம் கே.கே.நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்த டி.வி.எஸ். நகரைச் சோ்ந்த ஆறுமுகம் (36) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...