விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோவையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

கோவையில் இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுவதாக, அந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் கிரீன் கிளீன் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :24 மே 2022, 10:48 am

DIN

கோவையில் இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுவதாக, அந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் கிரீன் கிளீன் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பான லோகோ, போஸ்டா் வெளியீடு நிகழ்ச்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இது தொடா்பாக அந்த அமைப்பினா் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளா் இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 2 ஆம் தேதி அவரது நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கோவை கொடிசியா மைதானத்தில் இரவு 8.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில், பின்னணி பாடகா்கள் பலா் பங்கேற்க இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோா் திரள வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.