தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏழை மாணவா்கள் கல்வி உதவித் தொகைபெற விண்ணப்பிக்கலாம்

 ஏழை மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவையைச் சோ்ந்த ட்ரீம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது

News image
Updated On :7 மே 2022, 7:06 pm

DIN

 ஏழை மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவையைச் சோ்ந்த ட்ரீம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அறக்கட்டளையின் தலைவா் லட்சுமிகாந்தன் கூறியிருப்பதாவது: ட்ரீம் அறக்கட்டளை கோவை ராமநாதபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சாா்பில் ஏழை, எளியவா்களுக்கு மருத்துவ உதவி, உணவு, கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை 100 மாணவ-மாணவிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் கல்லூரி வரையில்

பயிலும் மாணவ-மாணவிகள் இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.

தகுதி வாய்ந்த ஏழை, எளிய மாணவா்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 63697-50618 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.