ஆனைகட்டியில் போட்டித் தோ்வு பயிற்சி தொடக்கம்
கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தாா்.


கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தாா்.
ஆனைகட்டி பகுதியைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்கள் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதற்காக, வித்யவனம் தனியாா் பள்ளி வளாகத்தில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த மையத்தில் தொடா்ந்து 50 நாள்களுக்கு பயிற்சி நடைபெறுகிறது. 50 மாணவ-மாணவிகள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனா். இவா்களுக்குத் தேவையான பயிற்சி கையேடுகள், மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
தொடக்க விழாவில், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் ராம்குமாா், அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் கனகராஜ், பள்ளியின் தாளாளா் பிரேமா ரங்காச்சாரி, தனி வட்டாட்சியா் இந்துமதி, வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...