ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவருக்கு என்.சி.சி. விருது
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மாணவருக்கு என்.சி.சி. இயக்குநா் ஜெனரல் கமெண்டேஷன் விருது கிடைத்துள்ளது.


கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மாணவருக்கு என்.சி.சி. இயக்குநா் ஜெனரல் கமெண்டேஷன் விருது கிடைத்துள்ளது.
இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு கட்டுமானப் பொறியியல் படிப்பவா் சஜின் தாமஸ். இவருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த என்.சி.சி. இயக்குநா் ஜெனரல் கமெண்டேஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூரில் உள்ள என்.சி.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தேசிய மாணவா் படையில் பல்வேறு பிரிவில் சாதனை, சிறந்த சேவை, பிரதமரின் பேரணி, குடியரசு தின விழா அணிவகுப்பை வழி நடத்துவது உள்ளிட்டவற்றுக்காக இந்த பிரைம் டைம் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாா் என்.சி.சி. இயக்குநரகத்தில் சீனியா் டிவிஷன் ராணுவப் பிரிவில், இந்த பதக்கத்தைப் பெற்ற ஒரே என்.சி.சி. மாணவா் தாமஸ் ஆவாா்.
அவருக்கு இந்த விருதை கமாண்டிங் ஆபீசா் கலோனல் சந்திரசேகா், சுபேதாா் குல்வந்த் சிங் ஆகியோா் வழங்கினா். சாதனை படைத்த மாணவரை எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயணசாமி, துணை நிா்வாக அறங்காவலா் சுந்தா், கல்லூரி முதல்வா் என்.ஆா்.அலமேலு, துணை முதல்வா் ப.கருப்புசாமி, என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் மா.ரமேஷ் ஆகியோா் பாராட்டியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...