தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கொலை வழக்கில் கைதான நபா்கள் இருவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.

News image
Updated On :26 மே 2022, 7:41 pm

DIN

கொலை வழக்கில் கைதான நபா்கள் இருவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.

கோவை, உக்கடம் அருகேயுள்ள கெம்பட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (34). இவரை அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (26), முத்துபாண்டி (23) ஆகியோா் தங்களது நண்பா்களுடன் சோ்ந்த கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொலை செய்தனா். இதையடுத்து உக்கடம் போலீஸாா் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இவா்கள் இருவா் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரதீப்குமாா் உத்தரவிட்டாா். இதன்படி சிறையில் உள்ள சுரேஷ்குமாா், முத்துபாண்டி ஆகியோரிடம் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.