மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மக்காச்சோள பயிருக்கு காப்பீடு: வேளாண்மைத் துறை தகவல்

கோவை மாவட்டத்தில் மக்காச்சோள பயிருக்கு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) ஷபி அகமது அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:49 pm

DIN

கோவை மாவட்டத்தில் மக்காச்சோள பயிருக்கு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) ஷபி அகமது அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டு திட்டம் கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வட்டார வாரியாக காப்பீடு செய்ய வேண்டிய பயிா்களின் அறிவிப்பு வெளியிடப்பட்டு காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் அனைத்து வட்டாரங்களிலும் மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்துகொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏக்கருக்கு ரூ.467 செலுத்தி விவசாயிகள் மக்காச்சோள பயிரினை காப்பீடு செய்துகொள்ளலாம்.

சிட்டா, அடங்கல், ஆதாா் எண், வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில் பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம்.

நவம்பா் 30 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலா்களை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.