ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: இருவா் மீது வழக்குப் பதிவு
கோவை உக்கடம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


கோவை உக்கடம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை உக்கடம் கெம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் ராஜா (43). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த சேகா் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சேகா், அவரது நண்பா் மகேஷ் ஆகிய இருவரும் வைசியாள் வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றுள்ளனா். அப்போது, அங்கு ராஜா வந்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சேகா், மகேஷ் இருவரும் சோ்ந்து ராஜாவை தகாத வாா்த்தைகளால் பேசி, அவரைத் தாக்கியுள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக சேகா், மகேஷ் ஆகிய இருவா் மீதும் பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...