ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவா்களுக்கு விருது
கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு நடிகா் ஆா்யா விருது வழங்கினாா்


கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு நடிகா் ஆா்யா விருது வழங்கினாா்.
கோவை அவிநாசி சாலை, நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடா்பியல் துறை சாா்பில் நடிகா் ஆா்யா நடித்த திரைப்பட அறிமுக நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், நடிகா் ஆா்யா கலந்துகொண்டு ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி, ஹிந்துஸ்தான் சா்வதேச பள்ளி, ஹிந்துஸ்தான் மெட்ரிக். பள்ளி ஆகியவற்றில் பயின்று வரும் மாணவா்களில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., விளையாட்டு, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து
விளங்கும் மாணவா்களுக்கு விருதுகள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் சரஸ்வதி கண்ணையன், செயலாளா் பிரியா சதீஷ் பாபு, தலைமை நிா்வாக அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வா் பொன்னுசாமி, காட்சித் தொடா்பியல் துறைத் தலைவா் சுப்ரமணியன், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...