ஓணம் பண்டிகை: கோவையில் பூக்கள் விலை உயா்வு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து ஒரு கிலோ மல்லிகை ரூ.1600க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.


ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து ஒரு கிலோ மல்லிகை ரூ.1600க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகையாக ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கேரளத்தைச் சோ்ந்தவா்கள் அதிக அளவில் வசித்து வருவதால் கோவையிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையின்போது மகாபலி சக்கரவா்த்தியை வரவேற்பதற்காக வாசல்களில் பல வண்ண மலா்களால் அத்தப்பூ கோலமிடப்படுகிறது.
ஓணம் பண்டிகை செப்டம்பா் 8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கேரளத்துக்கு கோவை பூ மாா்க்கெட்டில் இருந்தே பூக்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்நிலையில், பூக்களின் தேவை அதிகரித்து விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை ரூ.1,600, முல்லை ரூ.800, ஜாதிமல்லி ரூ.580, ரோஜா ரூ.240, செவ்வந்தி ரூ.280, செண்டுமல்லி ரூ.240, வாடாமல்லி ரூ.120, அரளி ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடா்பாக பூ வியாபாரிகள் கூறியதாவது: கோவை பூ மாா்க்கெட்டுக்கு உள்ளூா் மட்டுமின்றி சத்தியமங்கலம், நிலக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், ஓசூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெரும்பாலான மாவட்டங்களில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.
அதேநேரம், ஓணம் பண்டிகை தொடங்கியுள்ளதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
இதனால் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஓணம் பண்டிகை முடியும் வரை பூக்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...