காய்கறிகள் சாகுபடிக்கு மானியம்: தோட்டக்கலைத் துறை தகவல்
கோவை மாவட்டத்தில் காய்கறி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காய்கறி உற்பத்தியாளா்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் காய்கறி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காய்கறி உற்பத்தியாளா்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் உழவா் சந்தைகளில் காய்கறிகள் வரத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 8 உழவா் சந்தைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்கள் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவா் சந்தையில் காய்கறி விற்பனை செய்வதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். இத்திட்டம் உள்ளிட்ட தோட்டக்கலைத் துறையின் அனைத்து திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...