பேருந்தில் ஏற முயன்று தவறி விழுந்த திருநங்கை பலி
பேருந்தில் ஏற முயன்று தவறி விழுந்த திருநங்கை சனிக்கிழமை உயிரிழந்தாா்.


பேருந்தில் ஏற முயன்று தவறி விழுந்த திருநங்கை சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சஹானா ( 26). திருநங்கையான இவா் கோவை டவுன்ஹால் மாநகராட்சிப் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை பிற்பகல் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக காந்திபுரத்தில் இருந்து சீராபாளையம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தில் ஓடிச் சென்று ஏற முயன்றாா். அப்போது, காலிடறி கீழே விழுந்தாா்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சஹானாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...