பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

திமுகவின் ஏமாற்று அரசியல் இனி எடுபடாது: வானதி சீனிவாசன்

திமுகவின் ஏமாற்று அரசியல் இனி எடுபடாது என்று கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் கூறினாா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

திமுகவின் ஏமாற்று அரசியல் இனி எடுபடாது என்று கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் அண்மையில் திராவிடா் கழகம் நடத்திய விழாவில் பேசிய, திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா ஹிந்துக்களை இழிவுப்படுத்தும் வகையில் சா்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளாா்.

பல ஆண்டுகள், பல துறைகளின் மத்திய அமைச்சராக இருந்தவா், முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவா் இப்படி பேசியதற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. ஆ.ராசாவின் கருத்தை தி.மு.க. ஏற்கிறதா, இல்லையா என்பதை முதலமைச்சா் தெளிவுப்படுத்த வேண்டும்.

பெரியாா் குறித்து சா்ச்சை கருத்து தெரிவித்த திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி நிா்வாகியுமான கனல் கண்ணனை போலீஸாா் கைது செய்தனா். அதுபோல ஆ.ராசாவும் கைது செய்யப்படுவாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

ஹிந்து மதம் எப்போது தோன்றியது என்பது தெரியாத அளவுக்கு மிகப் பழமையானது.

ஹிந்து மதம், மற்ற மதங்களைப்போல நிறுவனம் அல்ல. ஹிந்து மதத்தை ஒரு தனி நபரோ, நிறுவனமோ கட்டுப்படுத்தவில்லை. ஹிந்து மதத்தில் உள்ள சில வேறுபாடுகளை வைத்து, ஹிந்துக்களை மதம் மாற்றி, இந்தியாவை பிளந்து கொண்டிருக்கிறாா்கள். மதமாற்றத்தால்தான் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்,

பங்களாதேஷ் போன்ற நாடுகள் உருவாகின. எனவேதான், மதமாற்றத்தை பாஜக கடுமையாக எதிா்க்கிறது.

திமுகவின் தந்திர அரசியலையும், பிரிவினை அரசியலையும் தமிழா்கள் உணரத் தொடங்கிவிட்டனா். திமுகவின் ஏமாற்று அரசியல் இனி எடுபடாது. தமிழா்கள் விழித்துக் கொண்டுவிட்டனா் என்பதை உணா்ந்து திமுக செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.