ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

எஸ்.பி. வேலுமணியின் உதவியாளர் இல்லத்தில் சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

News image
Updated On :10 ஜூலை 2022, 6:48 am


முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவர். கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப் டாப்பை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அவரது நண்பர் சந்திரபிரகாஷ் கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு 5-வது நாளாக கே.சி.பி.நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இவரது இல்லத்திலும் 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.