கோவையில் கொங்கலம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா
By DIN | Published On : 19th May 2022 01:22 PM | Last Updated : 19th May 2022 01:29 PM | அ+அ அ- |

கோவை: கோவையில் கொங்கலம்மன் திருக்கோயிலின் திருக்கல்யாண உற்சவ திருவிழாவில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஒயிலாட்டம் ஆடி அசத்தியது பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது.
கோவை சரவனம்பட்டியை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கொங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூன்றாம் ஆண்டு திருக்கல்யான உற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பூச்சாட்டுடன் தொடங்கிய திருவிழாவில் ஒரு வார நிகழ்வாக சக்தி கரகம் எடுத்தல், அம்மன் அழைத்தல், மாவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக கோயிலின் வளாகத்தில் சிம்மகுரல் கலை குழுவின் சார்பில் ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என வட்டமிட்டபடி ஆடி அசத்தியது பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம், அம்மன் திருவீதி உலா, சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...