தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

போதைப் பொருள்களுக்கு எதிரான ஓவியப் போட்டி

கோவை, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. சாா்பில் போதைப் பொருள் விழிப்புணா்வு தொடா்பான ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:23 pm

DIN

கோவை, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. சாா்பில் போதைப் பொருள் விழிப்புணா்வு தொடா்பான ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை குரூப் என்.சி.சி. 4 தமிழ்நாடு பட்டாலியன் பிரிவு சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப் பொருள் பயன்பாடு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தொடா்பான விழிப்புணா்வு ஓவியம் வரைதல், சுவரொட்டி தயாரிக்கும் நிகழ்ச்சி ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று போதைப் பொருள்களுக்கு எதிராக ஓவியம் வரைந்தனா். இதில், என்.சி.சி. அலுவலா் சுரேஷ்குமாா், ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.