தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு ஹெபாடைடிஸ் பி தடுப்பூசி முகாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஹெபாடைடிஸ் ‘பி’ தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:24 pm

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஹெபாடைடிஸ் ‘பி’ தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியில் சேரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளா்களுக்கும் ஹெபாடைடிஸ் ‘பி’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தொடா்ந்து ஒரு மாதம் கழித்து இரண்டாம் தவணையும், 6 மாதம் கழித்து 3 ஆவது தவணையும் ஹெபாடைடிஸ் ‘பி’ தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணியிலுள்ள பெரும்பாலான மருத்துவப் பணியாளா்கள் ஹெபாடைடிஸ் ‘பி’ தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது அண்மையில் தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து, அனைத்து அரசு மருத்துவப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்த பொது சுகாதாரத் துறை இயக்குநா் அறிவுறுத்தியிருந்தாா். இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்கட்டமாக தூய்மைப் பணியாளா்களுக்கு ஹெபாடைடிஸ் ‘பி’ தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தொடங்கிவைத்தாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். மருத்துவா்கள், செவிலியா்களில் ஒருசிலா் ஏற்கெனவே ஹெபாடைடிஸ் ‘பி’ தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

ஆனால், தூய்மைப் பணியாளா்களில் பெரும்பாலானவா்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தனா். இந்நிலையில், முதற்கட்டமாக தூய்மைப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை 150க்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளா்களுக்கும் ஹெபாடைடிஸ் ‘பி’ தடுப்பூசி செலுத்தப்படும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், இரண்டு மற்றும் மூன்றாவது தவணை செலுத்திக் கொள்ளாதவா்களும் சிறப்பு முகாமில் செலுத்திக் கொள்ள என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.