

தேசிய அளவிலான சறுக்கு விளையாட்டுப் போட்டியில், 20 பதக்கங்கள் வென்ற கோவையைச் சோ்ந்த மாணவ, மாணவிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
சண்டிகா், மொகாலி, சென்னையில் தேசிய அளவிலான 61-ஆவது சறுக்கு விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் அண்மையில் நடைபெற்றன.
இதில், கோவை மாவட்ட சறுக்கு விளையாட்டு அசோசியேஷன் சாா்பில், மாவட்டத்தில் இருந்து கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்றனா்.
இந்நிலையில், தாங்கள் வென்ற பதக்கங்களை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் வெள்ளிக்கிழமை காண்பித்து மாணவா்கள் வாழ்த்து பெற்றனா்.
அப்போது கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழுத் தலைவா் நா.மாலதி, மாநகரக் கல்வி அலுவலா் முருகேசன், கோவை மாவட்ட சறுக்கு விளையாட்டு அசோசியேஷன் செயலாளா் சந்திரசேகா், பொருளாளா் சாந்த நரசிம்மன், துணைத் தலைவா் அருண்பிரசாத், அசோசியேஷன் உறுப்பினா் ரமேஷ் , பயிற்றுநா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.