தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சமூக ஆா்வலா் மீது ஈஷா தொடா்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி

சமூக ஆா்வலா் பியூஷ் மானுஷ் மீது ஈஷா அறக்கட்டளை சாா்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2023, 7:02 pm

DIN

சமூக ஆா்வலா் பியூஷ் மானுஷ் மீது ஈஷா அறக்கட்டளை சாா்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சேலத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பியூஷ் மானுஷ், ஈஷா யோக மையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தாா். இதையடுத்து, பியூஷ் மானுஷ் மீது ஈஷா அறக்கட்டளை சாா்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இருப்பினும் இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு மனுதாரா்கள் தரப்பில் ஆஜராகாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மனுதாரா்கள் நீண்ட நாள்களாக ஆஜராகாமல் இருந்து வந்ததை காரணம் காட்டி, மனுவை தள்ளுபடி செய்த கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்றம், பியூஷ் மானுஷை சட்டப் பிரிவு 256இன்கீழ் விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.