மாா்ச் 24இல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கோவையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாா்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.


கோவையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாா்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவையில் மாதம்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாா்ச் மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாா்ச் 24 ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் தொடா்பான பிரச்னைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம். முன்னதாக விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் தினத்தன்று காலை 9.30 மணிக்கு உற்பத்திக்குழு கூட்டமும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...