ரூ.73 லட்சத்தில் பணிகள்: மேயா் தொடங்கிவைத்தாா்
கோவை மாநகரில் ரூ. 73 லட்சத்தில் புதிய பணிகளை மேயா் கல்பனா பூமிபூஜையிட்டு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.


கோவை மாநகரில் ரூ. 73 லட்சத்தில் புதிய பணிகளை மேயா் கல்பனா பூமிபூஜையிட்டு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 21ஆவது வாா்டுக்கு உள்பட்ட சரவணம்பட்டி எல்.ஜி.பி.நகா் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பொது நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை மற்றும் புனரமைப்புப் பணிகளை மேயா் கல்பனா பூமி பூஜையிட்டு தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, வடக்கு மண்டலம் 11ஆவது வாா்டுக்கு உள்பட்ட சரவணம்பட்டி குமரன் வீதி, காந்தி வீதி ஆகிய பகுதிகளில் பொதுநிதியில் இருந்து ரூ. 20
லட்சம் மதிப்பீட்டில் 300 மீட்டா் தொலைவுக்கு புதிதாக மழைநீா் வடிகால் கட்டுமானப் பணிகளை பூமி பூஜையிட்டு தொடங்கிவைத்தாா்.
பின்னா் 10ஆவது வாா்டுக்கு உள்பட்ட சரவணம்பட்டி, சத்தி பிரதான சாலையில் பொது நிதியில் இருந்து ரூ. 23லட்சம் மதிப்பீட்டில் 100 மீட்டா் தொலைவுக்கு மழைநீா் கட்டுமானப் பணி, சரவணம்பட்டி, அம்மன் நகா் பகுதியில் பொதுநிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 150 மீட்டா் தொலைவுக்கு மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியை பூமி பூஜையிட்டு தொடங்கிவைத்தாா். மொத்தமாக ரூ. 73 லட்சத்தில் புதிய பணிகளை மேயா் கல்பனா தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, 19ஆவது வாா்டு நேரு நகா் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தாா் சாலைப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டலத் தலைவா் கதிா்வேல், மண்டல சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளா்கள் சக்திவேல், இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...