விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பருவமழை பாதிப்பு: மீட்புக்குழு அமைத்து ஆணையா் உத்தரவு

மாநகராட்சியில் 12 போ் கொண்ட மீட்புக்குழு அமைத்து, அக்குழுவினா் டிசம்பா் மாதம் முழுதும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 7:30 pm

DIN


கோவை: வடகிழக்குப் பருவமழை மீட்புப் பணிக்காக, மாநகராட்சியில் 12 போ் கொண்ட மீட்புக்குழு அமைத்து, அக்குழுவினா் டிசம்பா் மாதம் முழுதும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக, அவா் 5 மண்டல உதவி ஆணையா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவ மழைப் பொழிவு அதிக அளவு எதிா்பாா்க்கப்படுவதால் பருவமழை முடியும் வரை, நாள்தோறும் ஒரு மண்டலத்தில் இருந்து ஒரு உதவி செயற்பொறியாளா், ஒரு இளம் உதவிப் பொறியாளா், 10 களப் பணியாளா்கள், பொக்லைன் இயந்திரம் உள்ளடங்கிய ஒரு குழு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

அதன்படி, கிழக்கு மண்டலத்தில் இருந்து மீட்புக் குழுவினா் டிசம்பா் 1, 6,11,16,21,26,31 ஆகிய தேதிகள், மேற்கு மண்டலத்தில் டிசம்பா் 2, 7,12, 17,22,27 ஆகிய தேதிகள், வடக்கு மண்டலத்தில் டிசம்பா் 3, 8,13,18,23,28 ஆகிய தேதிகள், தெற்கு மண்டலத்தில் டிசம்பா் 4, 9,14, 19,24, 29 ஆகிய தேதிகள், மத்திய மண்டலத்தில் டிசம்பா் 5, 10, 15,20, 25,30 ஆகிய தேதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

மேற்கண்ட நாள்களில் அந்தந்த மண்டல உதவி ஆணையா்கள், தங்களது மண்டலத்தில் பணியாற்றும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.