துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அறிவார்ந்த சென்னை ரசிகர்கள்..! தோல்வியிலும் நெகிழ்ச்சியாகப் பேசிய கொல்கத்தா ரசிகர்!

சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற கொல்கத்தா ரசிகரின் பதிவு குறித்து...

News image

சிஎஸ்கே, கேகேஆர் ரசிகர்கள். - படம்: இன்ஸ்டா / கேகேஆர் ஷங்கர்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:01 pm IST

சேப்பாக்கத்தில் நேற்றிரவு (ஏப்.14) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்குப் பிறகு, கொல்கத்தா அணியின் ரசிகர்கள் பலர் சென்னை ரசிகர்களை வெகுவாகப் பாராட்டி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 192/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 160/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. 32 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்குப் பிறகு கொல்கத்தாவில் இருந்து வந்த ரசிகர்கள் பலர் சிஎஸ்கே ரசிகர்களின் நடத்தைகள் குறித்து நல்ல முறையில் பேட்டியளித்திருந்தார்கள். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கேகேஆர் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருப்பதாவது:

போட்டிக்குப் பிறகு எனக்கு ஆதரவு அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி. நான் சிறிது உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. அடுத்த போட்டியில் பார்ப்போம்.

போட்டியில் தோற்றாலும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். நன்றி சென்னை மக்களே! வெற்றியிலும் தோல்வியிலும் எனது விஸ்வாசம் கொல்கத்தா அணிக்கு இருக்கிறது.

இந்தப் போட்டியில் சென்னை ரசிகர்கள் என் மனதை வென்று விட்டார்கள். என்னைப் பார்த்துக்கொண்டதற்கும் மரியாதை அளித்ததுக்கும் மிக்க நன்றி எனக் கூறியுள்ளார்.

Summary

The Knowledgeable Chennai Fans! A Kolkata Fan Speaks Movingly—Even in Defeat!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.